சின்ன வெங்காயம் மற்றும் அரிசி கழுவிய தண்ணீரை சேர்த்து முடிவு செய்யும் கண்டிஷனர் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சின்ன வெங்காயத்தை அரைத்து சாறை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை அரிசி ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும், பொடுகுத் தொல்லை குறையும். முடி அடர்த்தியாக வளரும்.