நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திருச்செங்கோடு நகராட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழா இன்று (ஜன.13) நடைபெற்றது.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டு போட்டிகளை தொடக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பொங்கலிட்டு பொங்கல் திருநாளை கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் நகரமன்ற உறுப்பினர் நளினி சுரேஷ் பாபு, கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.