திருச்செங்கோடு: பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

57பார்த்தது
தமிழர் திருநாள் பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் மூலம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். மேலும் உடன் நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்‌.

தொடர்புடைய செய்தி