மகாராஷ்டிரா: புனே வானவாடி பகுதியில் உள்ள ஜக்தாப் சவுக்கு என்ற நகரில் காவல்துறை உயர் அதிகாரியின் மகள் மது போதையில் செய்த அட்டூழியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான அந்த இளம்பெண், நேற்று (பிப்.15) பொதுமக்கள் முன்பாக ஒழுங்கீனமாக நடந்து கொண்டது மட்டுமின்றி போக்குவரத்துக்கும் இடையூறை ஏற்படுத்தியுள்ளார். போலீசார் விசாரணையில், இந்தப் பெண் மது போதையில் குடியிருப்பில் தகராறு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.