மேற்கு வங்காளம்: ஜோதிர்மோ ஜனா என்ற பள்ளி மாணவரின் காலில் நேற்று (பிப். 15) பாம்பு கடித்தது. இதையடுத்து மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட ஜனாவுக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் பள்ளியில் தேர்வு நடைபெறும் நாளில் பாம்பு கடித்ததால் அவரால் தேர்வுக்கு செல்லமுடியவில்லை. ஆனாலும், பள்ளியில் சிறப்பு அனுமதி பெற்று மருத்துவமனையில் இருந்தே ஜனா தேர்வு எழுதியுள்ளார்.