திருச்செங்கோடு: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

74பார்த்தது
திருச்செங்கோடு: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு நகரம், 9-வது வார்டு கீழேரிப்பட்டி பகுதியில் மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு புதிய நியாய விலைக் கடையினை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி