நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் திருமலை நாயக்கர் 442-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த நாயுடு நாயக்கர் அசோசியேசன் மற்றும் நாயக்கர் இளைஞர் பேரவைசார்பில் பெரிய கொல்லபட்டி, சின்ன கொல்லபட்டி ஊர் பொதுமக்கள் அவருடைய திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செந்தில், கொடி அரசு, ரேணுகோபால், வடிவேல், ரவி முரளி, விஜயகுமார் கலந்து கொண்டனர்.