நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள், நடைபெற்று முடிந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா இன்று (ஜனவரி 3) ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் வட்டூர் ஊராட்சியில் பால்வளத்துறை சார்பாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.