நாகை: சம்பா பயிர் இன்சூரன்ஸ் செய்ய நவம்பர் 15 கடைசி நாள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழை, புயல் மற்றும் வெள்ளத்தால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் இழப்பீடு பெறும் வகையில் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 549 ரூபாய் ப்ரீமியம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 ஆம் தேதி கடைசி நாளாகும் என்று வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.