மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை ரூ. 3. 63 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வரும் பணியை சுற்றுலாத்துறை ஆணையா் சி. சமயமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.
தரங்கம்பாடியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை 36, 410 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல்தளத்துடன் உள்ளது. இதை ரூ. 3. 63 கோடி மதிப்பீட்டில் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதை சுற்றுலாத்துறை ஆணையா் சி. சமயமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
பணி விவரம் குறித்து பொறியாளா்களிடம் கேட்டறிந்து ஒப்பந்தகாலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களிடம் அவா்கள் தெரிவித்தனா். தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி குமரவேல், துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜ கஜேந்திரகுமாா், வட்டாட்சியா் மகேஷ், தொல்லியல்துறை உதவிப் பொறியாளா் தினேஷ், பொதுப்பணித்துறை (கட்டடம் மற்றும் கட்டுமான பராமரிப்பு பணிகள்) கேசவன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.