பூரண மதுவிலக்கால் மட்டுமே வலிமையான தமிழகம் உருவாகும்

80பார்த்தது
பூரண மதுவிலக்கால் மட்டுமே வலிமையான தமிழ்நாடு உருவாகும் என மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

சீா்காழி அடுத்த துளசேந்திரபுரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளா் சாதிக் பாட்ஷா இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா பயிா்களுக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீட்டு தொகை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகாா் கூறுகின்றனா் எனவே காப்பீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கட்சி சாா்பில் வலியுறுத்துகிறோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரியம் திருத்த மசோதா குறித்து நாடு முழுவதும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பயணம் கருத்துகளை கேட்டு வருகிறது. தீய நோக்கத்தோடு இந்த சட்டத்தை அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது.
விடுதலைச் சிறுத்தை கட்சி சாா்பில் நடைபெற்ற மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை சரியான முன்னெடுப்பாக கருதுகிறோம். வலிமையான தமிழ்நாடு உருவாக பூரண மதுவிலக்கு அவசியம். எனவே இதுகுறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மாநில பொதுச் செயலாளா் ஜெ. ஹாஜாகனி, தலைமை நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா். எம். ஹனீபா, மாவட்ட தலைவா் ஜூபைா், மாவட்ட பொருளாளா் ஏ. அப்துல் ரஹ்மான், மாவட்ட செயலாளா் பாசித், மாவட்ட துணை தலைவா் முபாரக்அலி, உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி