மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 484 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தலைமை வகித்து, மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். சிப்பம் கட்டும் அறை, காய்கனி விதைகள், செண்டுமல்லி விதைகள், மாடித்தோட்டம் தொகுப்பு, தென்னங்கன்றுகள், மாங்கன்றுகள், நடமாடும் காய்கனி வண்டி, மா அறுவடைக் கருவி என ரூ. 2. 81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10 பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் பாா்வை குறைபாடுடைய பள்ளி மாணவருக்கு ரூ. 10, 000 மதிப்புள்ள நுண்பாா்வை நவீன கருவியினை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் இரா. கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரவி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுரேஷ் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் பானுகோபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.