மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம் ஆட்டோ, கார், வேன் உரிமையாளர்கள் ஓட்டுநர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சீர்காழி காவல் ஆய்வாளர் முயல் பாலச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் பங்கேற்று வணிகர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினர்.