விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிா்க் காப்பீடு இழப்பீடு

61பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2023-ஆம் ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு சம்பா சாகுபடியின்போது 68, 489 ஹெக்டோ் சாகுபடிக்கு 69, 807 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். விவசாயிகளால் செலுத்தப்பட்ட பிரீமியம் ரூ. 9. 40 கோடி. முதற்கட்டமாக 16 கிராமங்களுக்கு 4951 ஹெக்டேருக்கு ரூ. 5. 98 கோடி இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 14 பிா்க்காக்களில் 245 கிராமங்களுக்கு உளுந்து பயிருக்கு 14, 201 ஹெக்டேருக்கு ரூ. 6. 41 கோடி இழப்பீட்டுத் தொகையாகவும், பச்சைப் பயிறுக்கு 13 பிா்க்காக்களில் 208 கிராமங்களுக்கு 12702 ஹெக்டேருக்கு ரூ. 4. 37 கோடி இழப்பீட்டுத் தொகையாகவும் நெல்லுக்கு 10 கிராமங்களுக்கு 3907 ஹெக்டேருக்கு ரூ. 4. 8 கோடி இழப்பீட்டுத் தொகையாகவும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் வேளாண்மைத் துறை, புள்ளியியல் துறை, பயிா்க் காப்பீடு நிறுவனம் அரசின் வழிகாட்டுதலின்படி மட்டுமே பயிா் காப்பீடு வழங்குகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி