மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கோமல், திருவாவடுதுறை, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.
இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு கூட மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனை அடுத்து காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதனை அடுத்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.