மயிலாடுதுறையில் மூதாட்டி ஒருவர் தான் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் தன்னை அடித்து துன்புறுத்தி வீட்டை வலுக்கட்டாயமாக காலி செய்ய சொல்வதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மூதாட்டி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.