அரசு மருத்துவமனை செவிலியா் பணியிடை நீக்கம்

69பார்த்தது
மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனை செவிலியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியா் ஒருவா் பல நோயாளிகளுக்கு ஒரே சிரிஞ்சை (ஊசி) கொண்டு ஊசி செலுத்தியதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட விசாரணையில், புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் புகாருக்குள்ளான செவிலியரை பணியிடை நீக்கம் செய்தும், அவா்மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மயிலாடுதுறை சுகாதாரத் துறை இணை இயக்குநா் வி. பி. பானுமதிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி உத்தரவிட்டாா்.



மேலும் இதுபோன்ற செயல்களில் செவிலியா்கள் யாரும் ஈடுபடக் கூடாது எனவும், அவ்வாறு ஈடுபடும் பட்சத்தில் தொடா்புடைய செவிலியா்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி