மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, சிப்காட், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம், பூம்புகார் பனை அறக்கட்டளை, குத்தாலம் பேரூராட்சி இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரி கரைகள் மற்றும் தமிழ்நாட்டில் நீர்நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி குத்தாலம் காவிரி கரையில் தொடர்ச்சியாக பனை விதைகள் நடவு செய்யும் பணியானது நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி கலந்துகொண்டு பனை விதைகள் நடுப்பணையினை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.