கிருஷ்ணராயபுரம் - Krishnarayapuram

கரூர்: டூவீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து

மோளப்பட்டி பிரிவு சாலையில் டூவீலர் கார் நேருக்கு மோதி விபத்து ஒருவர் படுகாயம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, இ.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 29. இவர் பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 5:45 மணி அளவில், குஜிலியம்பாறையில் இருந்து பாலவிடுதி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் கரூர் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய எல்லைக்குள் உள்பட்ட மோளப்பட்டி பிரிவு சாலை அருகே வந்தபோது, எதிர்திசையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை, மஸ்தான் தெருவைச் சேர்ந்த சதாம் உசேன் வயது 38 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், கார்த்திக் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் கார்த்திக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் கே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சதாம் உசேன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా