கிருஷ்ணராயபுரம்- வேகமாக சென்ற டூவீலர் கார் மீது மோதி விபத்து

83பார்த்தது
கிருஷ்ணராயபுரம்- வேகமாக சென்ற டூவீலர் கார் மீது மோதி விபத்து.திருச்சி மாவட்டம் தொட்டியம், நாகைநல்லூர், இளங்கோ தெருவை சேர்ந்தவர் இளையராஜா வயது 34.இவர் ஜனவரி 31ஆம் தேதி காலை 10 மணியளவில், கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.இவரது வாகனம் கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு வந்த போது டூவீலரை வேகமாக ஓட்டிச் சென்றார்.அப்போது எதிர் திசையில் டிஎன் 48 ஏஒய் 8021 என்ற எண் கொண்ட கார் வந்தபோது, டூவீலரை கட்டுப்படுத்த முடியாமல், இளையராஜா கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் இளையராஜாவுக்கு வலது கால் பாதத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக புகார் அளித்த இளையராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி