வரும் 24ஆம் தேதி 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பெரியகருப்பன், "தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமையவுள்ளன. முதல்வர் மருந்தகங்களில் பிரதமரின் மக்கள் மருந்தகம் உட்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத வகையில் மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.