கரூர்: வீடு திரும்பாத வேலைக்குச் சென்ற கணவன்; மனைவி புகார்

82பார்த்தது
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டி, கே பி எஸ் காம்ப்ளக்ஸ் இரண்டாவது மாடி பகுதி சேர்ந்தவர் கார்த்திக் வயது 42. இவர் திருச்சியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் அசிஸ்டன்ட் ப்ரொஃபசராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா வயது 32. இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி காலை 7 மணி அளவில் வேலைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்ற உதவி பேராசிரியர் கார்த்திக் வீடு திரும்பவில்லை.  இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரேமா, கார்த்திக் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவரது நண்பர்களிடத்தில் விசாரித்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறாததால், தனது கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மாயமான உதவி பேராசிரியர் கார்த்திக்கை தேடி வருகின்றனர் சிந்தாமணிபட்டி காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி