உ.பி: நொய்டாவில் திருமண ஊர்வலத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இரண்டரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகாபூர் கிராமத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில் மணமகனின் நண்பர் ஒருவர் துப்பாக்கியை சுட்டுக் கொண்டாடினர். அப்போது, பால்கனியில் நின்றுகொண்டு ஊர்வலத்தை ரசித்துக் கொண்டிருந்த சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தான். இதன் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.