கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வ. வேப்பங்குடியில் ஸ்ரீ பெரிய காண்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து கலச பூஜை, மூர்த்தி ஹோமம், மூல மந்திர ஹோமம், அதிர்ஷ்ட பந்தன மருந்து சாத்துதல், உபச்சார பூஜைகள் நடைபெற்று முடிந்து பொன்னர் சங்கர் வரலாற்று நாடகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை மண்டப பூஜை, கலச ஹோமம் , இரண்டாம் கால மந்திர ஹோமம் நடைபெற்று முடிந்து ஸ்ரீ பெரிய கண்டியம்மன் மற்றும் பரிவார ஆலய விமானம் ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பெரிய கண்டியம்மனுக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டு, பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் குடிபாட்டு மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில தகவல் உரிமை ஆணையாளர் கதிரவன், வரவனை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கந்தசாமி, பசுமைகுடி தன்னார்வ இயக்கத்தின் நிறுவன தலைவரும் அமெரிக்கா பாஸ்டன் கணினி தொழில்நுட்ப ஆலோசகர் நரேந்திரன் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 48 நாள் மண்டல அபிஷேகம் பெரிய கண்டியம்மனுக்கு நடைபெற இருப்பதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.
ஆலயவளாகத்தில் பெரிய கண்டியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு வந்து மேளதாளங்கள் முழங்க, அம்மனை வழிபாடு நடத்தினர்.