கிருஷ்ணராயபுரம் - Krishnarayapuram

கரூர்: ட்ரோன் மூலம் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்க செயல் விளக்கம்

ட்ரோன் மூலம் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் வேளாண்மை கல்லூரி மற்றும் நோவா ஏரோஸ் பேஸ் நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா செக்கணம் பகுதியில் வயல்வெளியில் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் நோவா ஏரோஸ்பேஸ் மேலாளர் சுரேஷ்குமார், தலைமை டெக்னிக்கல் அலுவலர் சுந்தர், துணைத் தலைவர் அபிஷேக், தலைமை நிர்வாக அலுவலர் சத்யபிரியன், கல்லூரி மாணவ- மாணவியர், ட்ரோன் பயிற்சியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியின் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்கவும், குறைந்த செலவில் அதிக நிலத்திற்கு மருந்து தெளிக்கவும், குறித்த மற்றும் குறைந்த நேரத்தில் மருந்து தெளிக்கவும், ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்தல் போன்ற பல நன்மைகள் விவசாயிகளுக்கு ஏற்படும் என்பதால் இதுகுறித்து நேரடி செயல் விளக்கம் அளித்தனர். பின்னர் மருந்து தெளித்த தோட்டத்தை விவசாயிகள் பார்வையிட்டனர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள் பழைய முறைப்படி கையில் தெளிப்பதை விட டரோன் மூலம் மருந்து தெளிப்பது எளிமையாகவும், பணிகளை விரைவாக முடிக்க ஏதுவாகவும் உள்ளது என தெரிவித்தனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా