கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பூத் ஏஜென்ட்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்குமரன் தலைமையில் அய்யர்மலை தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய விநாயகம், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், மேற்கு ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, குளித்தலை நகர செயலாளர் மணிகண்டன், மருதூர் பேரூர் கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், நங்கவரம் பேரூர் கழகச் செயலாளர் திருப்பதி, மருதூர் கிளைச் செயலாளர் மேட்டுமருதூர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.