கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைப்பு.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணவாடி கிராமத்தில் கடந்த 2020ம் வருடம் இடப்பிரச்சனை தொடர்பாக நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் ராயனூர், தில்லை நகரை சேர்ந்த அண்ணன் தம்பிகளனான பார்த்தீபன், கௌதம் மற்றும் பிரவீன் (எ) வெங்கடேஷ், ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை செய்து, எதிரிகள் பார்த்தீபன் மற்றும் கௌதம் ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய 3-வது குற்றவாளி பிரவீன் (எ) வெங்கடேஷ் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 02 வருடமாக தலைமறைவாக இருந்துவந்தார். இந்நிலையில் கரூர் அமர்வு நீதிமன்றதால் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்பட்டது.
இது தொடர்பாக அகிலன் தலைமையிலான கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவினர் வெங்கடேஷ்-ஐ திருச்சியில் நேற்று கைது செய்து, இன்று பிப்ரவரி 8ல் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்பு அஜர்படுத்தி திருச்சி மத்திய மத்திய சிறையில் அடைத்தனர்
இவர் மீது ஏற்கனவே தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இருந்து வருகிறது.
தலைமறைவு எதிரியை கைது செய்த கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவினருக்கு கரூர் மாவட்ட எஸ்பி பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு தெரிவித்தார்.