கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலராஜபுரம் ஊராட்சியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் திட்ட நிறைவு முகாம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வேளாண் இணை இயக்குநர் சிவானந்தம், கலால் உதவி ஆணையர் கருணாகரன், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, 51 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஆட்சியர் தங்கவேல். நலத்திட்டங்களை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தனர்.