கரூர்: வாலிபரை தாக்கி செல்போன், பைக், பணம் பறிப்பு

71பார்த்தது
கரூர்: வாலிபரை தாக்கி செல்போன், பைக், பணம் பறிப்பு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா 20. இவர் தனது பைக்கில் தனது ஊரைச் சேர்ந்த உறவினர் யுவன் ராஜவேலுடன் தனது வீட்டிற்கு செல்ல சங்கரன் மலைப்பட்டி சாலையில் சென்றுள்ளனர். அப்போது பின்னால் பதிவு எண் இல்லாத பைக்கில் வந்த மேலடை பகுதியைச் சேர்ந்த குமார், சந்தோஷ் ஆகிய இருவரும் சிவா மற்றும் யுவன் ராஜவேலை வழிமறித்து கையால் அடித்து ஜாதியை சொல்லித் திட்டி பைக், செல்போன், ரூ. 6000, கழுத்தில் இருந்த வெள்ளி சங்கிலி ஆகியவற்றை பிடுங்கி சென்றுவிட்டனர். காயம் பட்ட இருவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிவா அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று 2 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை

தொடர்புடைய செய்தி