கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா பில்லா பாளையம் ஊராட்சி வீரக்குமாரன் பட்டியை சேர்ந்தவர் கல்யாணி 33. இவர் கடந்த 15 ஆம் தேதி பில்லா பாளையம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது வீரவள்ளியை சேர்ந்த கார்த்திகேயன் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் காதலிக்கலாமா என கேட்டுள்ளனர். அதற்கு மறுத்த கல்யாணியை தகாத வார்த்தையால் திட்டி கட்டையால் வயிற்றில் அடித்துள்ளனர். இதை கேள்விப்பட்டு வந்த கல்யாணியின் தம்பி ரவிச்சந்திரனையும் திட்டி கட்டையால் அடித்து மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கல்யாணி அளித்த புகாரின் பேரில் கார்த்திகேயன், பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.