கீழடை சாலையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்.
ஒருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மாணிக்கபுரம் அருகே கீழடை காலனி தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா வயது 47.
இவர் பிப்ரவரி நான்காம் தேதி காலை 10 மணியளவில் பஞ்சபட்டியில் இருந்து கீழடை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள முனியாண்டி நாயக்கர் என்பவரது களம் அருகே சென்றபோது,
எதிர் திசையில் அதே கீழடை அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், பாரதிராஜா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பாரதிராஜாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த பாரதிராஜாவின் மூத்த சகோதரர் பாண்டியன் வயது 65 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.