பள்ளப்பட்டி: மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை

70பார்த்தது
பள்ளப்பட்டி- மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை. ஒருவர் கைது.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 6ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பள்ளப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் செயல்படும் ஜேகே அகமது மளிகை கடையில் சட்டவிரோத புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது.இந்த விற்பனையில் ஈடுபட்ட பள்ளப்பட்டி ஒடிசா நகரை சேர்ந்த அப்பாஸ் அலி வயது 47 என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 1,063 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அப்பாஸ் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

தொடர்புடைய செய்தி