கரூர்: விசிக வெற்றி விழா பேரணி மற்றும் கட்சி கொடியேற்று விழா

66பார்த்தது
கரூர் கிழக்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில கட்சியாக தேர்தல் அங்கீகாரம் பெற்று பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிகழ்வை கொண்டாடும் வகையில் வெற்றி விழா பேரணி மற்றும் கட்சி கொடியேற்று விழா இன்று நடைபெற்றது. 

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் வன்னியரசு (எ) மகாமுனி தலைமையில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி டாக்டர் அம்பேத்கார் பேருந்து நிறுத்தம் வரை சென்று முடிவடைந்தது. இதில் கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் உதயநிதி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேருந்து நிறுத்தம் முன்பு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினார். 

இதில் மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், நங்கவரம் பாக்கியராஜ், பழனிவேல், பொய்யாமணி பாரதி, வேப்பங்குடி கோபி, மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சாந்தி, கருப்பூர் விஜயகுமார், பிரபாகரன், பிரசாந்த், முற்போக்கு மாணவர் அணி அமைப்பாளர் பிரதிக், சமூக ஊடக மையம் சந்தோஷ், கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் முருகேசன், 13வது வார்டு கிளைச் செயலாளர் பார்த்திபன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.

தொடர்புடைய செய்தி