கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட மகிளிப்பட்டி, சிந்தலவாடி, புணவாசிபட்டி, மகாதானபுரம், பில்லாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் அறுவடைக்கு போதிய ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் இயந்திரம் கொண்டு அறுவடை செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 2000 வீதம் மற்றும் ஒரு சில பகுதியில் மணிக்கு ரூ. 1800 என வசூலிக்கப்படுகிறது.