திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுக்கா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி 29. இவர் கடந்த 15 ஆம் தேதி தனது பைக்கில் மோளப்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் கார்த்திக் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். அதனையடுத்து கார் ஓட்டுநர் சதாம் உசேன் மீது பாலவிடுதி போலீசார் நேற்று வழக்கு பதிவு.