கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின்
132 வது ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற விழாவில் தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , 2026 இல் தேர்தல் எப்படி இருக்கும் என மாணவர்கள் கேட்டார்கள் , கண்டிப்பாக 2026 தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கும் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார் அதுவே இங்கு உள்ள மாணவர்களின் விருப்பமாக தெரிகிறது , கூட்டணி குறித்த கேள்விக்கு நேரம் வரும்போது தலைவர் முடிவெடுப்பார் எனக்கு கூறினார் , தவெக பொதுக்குழுவில் வக்பு வாரிய மசோதா சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது , இது ஜனநாயக படுகொலை , இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஒரு கருப்பு சட்டம் என தெரிவித்தார்.