கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் அங்குரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனாலும் அங்கு போக்குவரத்து நெருக்கடி இருந்து வருவதால், போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் நிலை இருந்து வருகிறது.
இந்தநிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் சாலையில் நின்று போராட்டம் நடத்துவதால் பொதுமக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு மாற்று இடமாக அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.