கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியது முதல் கடும் வெயில் மாவட்ட மக்களை வாட்டி வந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் வெப்பத்தினால் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர் இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதிய வேளை முதலே ஆங்காங்கே வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்டு வந்த நிலையில் தற்போது நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையும் மற்றும் பூதப்பாண்டி இறச்சகுளம் உள்ளிட்ட மலையோர கிராமங்களிலும் மிதமான மழை பரவலாக பெய்து வருகிறது மேலும் தற்போது பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து நல்ல இதமான சூழல் நிலவி வருகிறது, இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பாக சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து நாகர்கோவில் மீனாட்சிபுரம் அருகே அமைந்துள்ள நடராஜபுரம் என்ற பகுதியில் மழையின் காரணமாக ஓடை உடைப்பு ஏற்பட்டு சாக்கடை மழை நீர் கலந்து அப்பகுதியில் உள்ள தெருக்களில் இந்த நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர், திடீரென பெய்த மழையின் காரணமாக சற்று மாவட்டம் முழுவதும் தற்போது வெப்பமும் தணிந்துள்ளது