வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை அல்மஸ் ஜிதுல் அஷ்ரஃப் பள்ளி வாசலில் இன்று (மார்ச் 30) ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கூட்டு ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கி ரமலான் பண்டிகையை கொண்டாடினர்.