மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மட்டும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முழுவதும் வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் , கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது , குமரி கிழக்கு , மேற்கு மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்கள் , நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.