நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் பராமரிப்பு பணி பாதிப்பு.

67பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் சுத்தப்படுத்தும் பணி மற்றும் பிட் லைன் பராமரிப்பு பணி போன்றவைகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பராமரிப்பு பணி பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி