டெல்லி: அண்மையில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை நிலைநாட்ட, சொத்து விவரங்களை பொதுவெளியில் வெளியிட நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்திருந்தனர். அந்த வகையில், நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் இருக்கும் 769 நீதிபதிகளில் 12% பேர் |(95 நீதிபதிகள்) மட்டுமே தங்களது சொத்து விவரங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.