கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. கொடியை கோவில் தந்திரி ஏற்றிய போது கொடி திடீரென மேலே செல்லாமல் சிக்கி கொண்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே கோவில் பணியாளர் ஒருவர் மேலே ஏறி சிக்கி கொடியை சரி செய்தார். அதன் பின்னர் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.