கார்த்திகை குமார் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இந்த நிறுவனம் சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை செய்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் நிறுவனத்தின் கணக்குகளை குமார் சரிபார்த்த போது, அங்கு வேலை செய்து பிரபு உட்பட சிலர் ரூ. 1 கோடி கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பிரபுவை கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகின்றனர்.