மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; வாக்காளர் அட்டை ஒப்படைப்பு

72பார்த்தது
நாகர்கோவில் அருகே ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட காரியாங்கோணம் கிராம மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் நாகர்கோயிலில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இன்று (16-ம் தேதி) மனு அளித்தனர்.

      நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழும் தங்கள் கிராமத்தில் ஏற்கனவே மின் மயானம் அமைக்க அதிகாரிகள் முற்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகவும் பின்னர் தற்போது மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் கூறினர்.
     ஏற்கனவே தங்கள் எதிர்ப்பை ஏற்று  திட்டத்தை கைவிடுவதாக கூறிய நிலையில், கிராம மக்களின் கருத்து கேட்ட பின்னர் தான் மின் மயானம் அமைக்கப்படும் எனக் கூறி விட்டு, தற்போது பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சில அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை கைவிட வேண்டும் எனக்கூறி மனு அளித்ததுடன் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி