சருமம் அதிகமாக வறண்டு இருந்தால் அதில் எண்ணெய் சுரப்பு குறைவாக இருக்கும். இதுபோன்ற சருமம் கொண்டவர்கள் கிளிசரின் கலந்த சோப்களை பயன்படுத்தலாம். சருமத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்கள் வேப்பிலை, சாலிசிலிக் அமிலம் இருக்கும் சோப்களை தேய்க்கலாம். உணர்திறன் கொண்ட சருமத்தினர் வண்ணம் மற்றும் வாசனை இல்லாத சோப்களை பயன்படுத்தலாம். சரும மருத்துவரின் ஆலோசனையோடு இந்த சோப்களை பயன்படுத்துவது நல்லது.