எல்லை பாதுகாப்பு படை வீரர் வீட்டில் திருட்டு - வீடியோ வைரல்

76பார்த்தது
இரணியல் அருகே உள்ள மைலோடு மடத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ததேயுவின் கலிஸ்டஸ். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பஞ்சாப் மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவரது வீட்டு காம்பவுண்ட்டிற்குள் நேற்று அதிகாலை நுழைந்த 2 மர்ம நபர்கள் அங்கிருந்த வெண்கலத்தினால் ஆன குட்டுவத்தை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. நேற்று அதிகாலை சுமார் 1. 20 மணியளவில் 2 மர்ம நபர்கள் பைக்கில் வருகின்றனர். அங்கு அவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து வெண்கலத்தில் ஆன குட்டுவத்தை தூக்கிக் கொண்டு பைக்கில் செல்கின்றனர். இந்த சம்பவம் சுமார் 4 நிமிடத்திற்குள் நடந்து முடிந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி