குளச்சல் - Kulachal

தக்கலை: தொடர் மழை: 119 மி.மீ மழை பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (அக்.,23) சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் பிற்பகல் திடீரென மாற்றம் ஏற்பட்டு மாலையில் மாவட்ட முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இதில் நாகர்கோவிலில் மட்டும் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் நாகர்கோவில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளப்பருக்கு ஏற்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று கிளம்பிய மாணவ மாணவிகள் பெரும் பாதிப்படைந்தனர்.   இந்த நிலையில் இன்றும் (அக்.,24) மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தக்கலை பகுதிகளில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக இன்று (அக்.,24) காலை 119 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் மயிலாடி, பூதப்பாண்டி, இரணியல், களியல், குழித்துறை  மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.        திற்பரப்பு அருவி பகுதிகளில்  கனமழை கொட்டி தீர்த்ததால் அருவியல் தண்ணீர் அதிகமாக  வருகிறது. இன்றும்  தொடர் மழையால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும்,   பொது மக்களுக்கும்  பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా