பாலியல் புகாரில் மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2016ல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்நடிகை புகாரளித்தார். இதையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று, முன்ஜாமின் கோரி சித்திக் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.