செல்போன் டவரில் ஏறி நின்று குஜராத் வாலிபர் தற்கொலை முயற்சி

52பார்த்தது
நாகர்கோவில் பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் 12 மணி அளவில் அங்கிருந்த 250 அடி உயர டவரின் மேல் ஏறி இருந்த வாலிபர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சிப்பதாக பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் டவரின் மேல் ஏறி அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. குஜராத்தை சேர்ந்த இம்ரான்கான் என்பதும் தெரியவந்தது. அவர் அங்கு போலீசாக வேலை பார்ப்பதாகவும் தற்பொழுது மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும் கூறினார். மேலும் தனது வங்கி கணக்கிற்கு ரூ. 15 ஆயிரம் பணம் வந்தது. அந்தப் பணத்தை திரும்ப கேட்டனர். நானும் தருவதாக கூறினேன். அதற்குள் எனது வங்கி கணக்கை முடக்கி விட்டனர். இதனால் எனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனது மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்த போதும் என்னால் பணத்தை எடுக்க முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் டவரில் மேல் ஏறி தற்கொலைக்கு முயன்றேன். என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

டேக்ஸ் :